header

இத வச்சே வெகுவாக தொப்பையை குறைக்கலாம் தெரியுமா?

தொப்பையை சில சிறப்பான இயற்கை வீட்டு முறைகளை கொண்டே குறைக்க இயலும். குறிப்பாக தேனை வைத்தே நம்மால் தொப்பையை குறைக்க முடியும் எனதற்போதைய ஆய்வு சொல்கிறது. தேனை வைத்து தொப்பையை குறைக்கும் 3 வழிகளை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆயுர்வேதம்

மருத்துவ பயன்பாட்டில் தேன் மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக இயற்கை முறை வைத்தியங்களான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவ போன்றவற்றில் இதன் பங்கு அளப்பரியது. நீண்ட காலம் கெடாத மிக பழமை வாய்ந்த உணவாக தேனை தான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆய்வு!

தேனை வைத்து செய்த ஆய்வில் உடல் எடை சார்ந்த சில தகவல்கள் வெளி வந்தன. அதாவது நமது உடலில் பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற கொழுப்புகள் தான் உடல் எடை மற்றும் தொப்பை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்த வகை தேவையற்ற தேங்கியுள்ள கொழுப்பை நீக்குவதற்கு தேன் உதவுகிறது என இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிட்டுள்ளன.

கொலஸ்ட்ரால்

தேனில் நல்ல கொலெஸ்ட்ரால்கள் அதிக அளவில் உள்ளது. மேலும், இவற்றில் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற கூடிய தன்மையும் இருப்பதால் மிக சுலபமாக தேனை கொண்டு தொப்பையை குறைத்து விடலாம். கூடவே இதய நோய்களையும் தடுக்கலாம்.

சத்துக்கள்

நாம் நினைப்பதை விடவும் தேனில் பல விதமான சத்துக்கள் உள்ளது. முக்கியமாக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், குளுக்கோஸ், மால்டோஸ், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, சோடியம் போன்றவை நிறைந்துள்ளது.

இதில் உள்ள பொட்டாசியம் தான் இதய நோய்களை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்கிறது.

எவ்வாறு பயன்படுத்தலாம்?

தேனை சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தும் போது தான், அதன் தன்மை சிறப்பாக இருக்கும். குறிப்பாக வெது வெதுப்பான நீர், எலுமிச்சை சாறு முதலியவற்றை கூறலாம்.

சிலர் பூண்டுடன் சேர்த்தும் சாப்பிடுவதுண்டு. இனி எப்படி இந்த தொப்பையை குறைக்கும் கலவையை தயாரிப்பது என்பதை பற்றி அறியலாம்.

தயாரிப்பு முறை #1

5 பூண்டு பற்களை எடுத்து கொண்டு அவற்றை துண்டு துண்டாக நறுக்கி ஒரு ஜாடியில் போட்டு கொள்ளவும். அதன் பின் இவை மூழ்கும் அளவிற்கு தேன் சேர்த்து கொள்ள வேண்டும்.

இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் தொப்பை கிடுகிடுவென குறையும்.

தயாரிப்பு முறை #2

1 கிளாஸ் மிதமான சுடு நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை கிடுகிடுவென குறையும். இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் தண்ணீரானது அதிக சூடு கொண்டதாக நிச்சயம் இருக்க கூடாது.

தயாரிப்பு முறை #3

1 ஸ்பூன் தேனை 1 கிளாஸ் வெது வெதுப்பான நீர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.

அல்லது 1 கிளாஸ் கிரீன் டீயில் தேனை 1 ஸ்பூன் கலந்து குடித்து வரலாம். இந்த வகையில் தேனை பயன்படுத்தினால் மிக விரைவிலே பானை வயிற்றையும், பருமனான உடலையும் குறைத்து விடலாம்.

Source : Daily1tips.com

FOLLOW US